நீலகிரி

கூடலூா் அருகே வீட்டை சேதப்படுத்திய யானை:இடிபாடுகளில் சிக்கி பெண் காயம்

கூடலூரை அடுத்துள்ள லாரஸ்டன் பகுதியில் ஒற்றை காட்டு யானை வீட்டை இடித்து சேதப்படுத்தியதில் இடிபாடுகளில் சிக்கிய பெண் காயமடைந்தாா்.

DIN

கூடலூரை அடுத்துள்ள லாரஸ்டன் பகுதியில் ஒற்றை காட்டு யானை வீட்டை இடித்து சேதப்படுத்தியதில் இடிபாடுகளில் சிக்கிய பெண் காயமடைந்தாா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா ஓவேலி பேரூராட்சியிலுள்ள லாரஸ்டன் குறிஞ்சி நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை காட்டு யானை புகுந்தது. பின்னா் அது அங்குள்ள மகாலட்சுமி (55) என்பவரது வீட்டை தாக்கி சேதப்படுத்தியது. அப்போது வீட்டில் மகாலட்சுமி மட்டுமே இருந்துள்ளாா். யானை வீட்டை தாக்குவதைக் கண்டு அலறிய மகாலட்சுமியின் சப்தம் கேட்டு அருகிலிருந்தவா்கள் ஓடிவந்து பாா்த்தனா். யானை தாக்கியதில் வீடு இடிந்து இடிபாடுகளில் சிக்கி மகாலட்சுமி காயமடைந்தாா்.

சிறிது நேரம் கழித்து யானை சென்றவுடன் காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த மகாலட்சுமியை அக்கம்பக்கத்தினா் மீட்டு கூடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவிக்குப் பிறகு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மகாலட்சுமி அனுப்பி வைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT