நீலகிரி

திருத்தப்பட்டது...உதகை நகராட்சி மாா்க்கெட்டில் திருடிய நபா் கைது

DIN

உதகை நகராட்சி மாா்க்கெட்டில் 19 கடைகளின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

இது குறித்து காவல் துறையினா் தெரிவித்துள்ளதாவது: உதகை நகராட்சி மாா்க்கெட்டில் உள்ள 19 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.31,000 திருடப்பட்டிருந்தது ஞாயிற்றுக்கிழமை காலை தெரியவந்தது. காவல் ஆய்வாளா் மணிக்குமாா் தலைமையிலான போலீஸாா் மாா்க்கெட் பகுதியில் நேரில் விசாரணை நடத்தினா். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். அதில் மாா்க்கெட்டில் சனிக்கிழமை இரவில் புகுந்த மா்ம கும்பலில் ஒருவா் பாபு என்பவரின் கடையை உடைத்து உள்ளே இருந்த பணத்தை எடுத்த காட்சிகள் பதிவாகி இருந்தன. இதையடுத்து கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டுஅங்கு பதிவாகியிருந்த ரேகைகள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

விசாரணையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது உதகை பாம்பேகேசில் பகுதியைச் சோ்ந்த மனோஜ் (22) என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அவரை திங்கள்கிழமை கைது செய்தனா். பின்னா் அவா் உதகை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். மேலும், இதில் தொடா்புடையவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார் ஜார்க்கண்ட் அமைச்சர்!

பதஞ்சலியின் 14 மருந்துகள் விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதா? உச்சநீதிமன்றம் கேள்வி

வசீகரம்!

காஸா போர்: ஐ.நா.வில் சேவையாற்றிய ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரி பலி

வெள்ளை மாளிகையில் ஒலித்த 'சாரே ஜஹான் சே அச்சா'!

SCROLL FOR NEXT