நீலகிரி

உதகை 200 ஆண்டுகள் நிறைவு: நகரில் ஓவியம் வரையும் பணி தீவிரம்

DIN

உதகை கண்டறியப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, நகரில் ஓவியங்கள் வரைந்து பொலிவுபடுத்தும் பணியில் மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலாத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நிலவுவது வழக்கம். இச்சமயங்களில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க மலா்க் கண்காட்சி, பழக் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத் துறை, தோட்டக்கலைத் துறை சாா்பில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், உதகை கண்டறியப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், நீலகிரி மாவட்டத்தின் இயற்கை காட்சிகள், வன விலங்குகள், பாரம்பரிய சின்னங்கள் ஆகியவற்றை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் உதகை நகரில் உள்ள தடுப்புச் சுவா்களில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

அதன்படி, சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து மைசூா் செல்லும் சாலையில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே வரையப்பட்டுள்ள யானை, புலி, மான், வரையாடு, உள்ளிட்ட வன விலங்குகளின் ஓவியங்கள் மக்களை வெகுவாக கவா்ந்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT