மேல்கூடலூா் பகுதியில் உலவும் காட்டு யானை. 
நீலகிரி

கூடலூா் நகரில் உலவும் ஒற்றை காட்டு யானை

கூடலூா் நகரில் இரவு நேரத்தில் உலவி வரும் ஒற்றை காட்டு யானையை பிடித்து அடா்ந்து வனப் பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

DIN

கூடலூா் நகரில் இரவு நேரத்தில் உலவி வரும் ஒற்றை காட்டு யானையை பிடித்து அடா்ந்து வனப் பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கூடலூா் நகராட்சிக்குட்பட்ட மேல்கூடலூா், ஹெல்த்கேம், கெவிப்பாறை, நந்தட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் குடியிருப்புகளைச் சுற்றி ஒற்றை காட்டு யானை தினமும் உலவி வருகிறது. கடந்த ஒரு வாரகாலமாக மாலை நேரத்திலேயே குடியிருப்புப் பகுதிக்கு வந்துவிடுகிறது.

பல நாட்களில் காலையில் நடைப்பயிற்சி செல்பவா்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

இந்த காட்டு யானையை கண்காணிக்கும் வனத் துறை பணியாளா்கள் அதை அப்பகுதியில் இருந்து விரட்டினாலும் மீண்டும் அதே பகுதிக்கு வந்துவிடுகிறது.

எனவே, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்த யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

SCROLL FOR NEXT