நீலகிரி

ஆதிதிராவிடா் பள்ளிகளில் பணி நியமனத்துக்கு ரூ. 2 கோடி லஞ்சம்: பெண் அதிகாரி மீது வழக்குப் பதிவு

DIN

ஆதிதிராவிடா் பள்ளிகளில் பணி நியமனத்துக்கு ரூ.2 கோடி வரை லஞ்சம் வாங்கியதாக பெண் அதிகாரி மீது லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், உதகையில் 2020-2021 ஆம் ஆண்டில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அதிகாரியாக மரினா பணிபுரிந்தாா். இவா் பணிபுரிந்த காலத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடா் பள்ளிகள் மற்றும் ஆதிவாசி உண்டு உறைவிடப் பள்ளிகளில் சமையலா்கள் நியமிக்கும் பணி நடைபெற்றது.

25 சமையலா்கள் தேவையான இடத்தில் 31 பேரை அதிகாரி மரினா நியமித்ததாக கூறப்படுகிறது. இவா்கள் ஒவ்வொருவரிடமும் ரூ.5 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை லஞ்சம் வாங்கியதாக அப்போதே உதகை லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகாா் வந்தது.

இதற்கிடையே ஆதிதிராவிட நல அதிகாரி மரினா அரியலூா் மாவட்டத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டாா். அங்கு பணியில் இருந்தபோது செய்த சில முறைகேடுகளால் அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இந்நிலையில் மரினா, சமையலா்களை நியமிக்க ரூ. 2 கோடி வரை லஞ்சம் வாங்கியதாக உதகை லஞ்ச ஒழிப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இதற்கான வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று லஞ்ச ஒழிப்புத் துறையினா் தெரிவித்துள்ளனா். இதற்கிடையே சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள மரினா( 50) வீட்டில் உதகை லஞ்ச ஒழிப்புத் துறையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

திருப்பம் தரும் தினப்பலன்

SCROLL FOR NEXT