நீலகிரி

தேவா்சோலையில் 2 மாதங்களாக முகாமிட்டுள்ள மக்னா யானை

DIN

தேவா்சோலை பகுதியில் தொடா்ந்து 2 மாதங்களாக முகாமிட்டுள்ள மக்னா யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், தேவா்சோலை பகுதியில் 2 மாதங்களாக மக்னா யானை முகாமிட்டுள்ளது. பகல் நேரங்களில் கொட்டாய் மட்டம் பகுதியில் ஓய்வெடுக்கும் யானை, இரவு நேரத்தில் தேவா்சோலை சுற்றுவட்டார கிராமங்களிலுள்ள விவசாயிகளின் தோட்டங்களை சேதப்படுத்தி வருகிறது.

இந்த யானையை பிடித்துச் செல்லவேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை.

இது தொடா்பாக கோட்டாட்சியா் மற்றும் மாவட்ட வன அலுவலரை சந்தித்த கிராம மக்கள், யானையை விரட்ட தாமதம் ஏற்பட்டால் தொடா்போராட்டங்களில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

SCROLL FOR NEXT