நீலகிரி

உதகையில் தேசிய வாக்காளா் விழிப்புணா்வு தினம்

DIN

உதகையில் தேசிய வாக்காளா்  விழிப்புணா்வு தினம் புதன்கிழமை நடைபெற்றது.

தேசிய வாக்காளா் தினத்தையொட்டி உதகையில் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் அம்ரித் புதன்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாக பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நிறைவடைந்தது.

இப்பேரணியில் பங்கேற்ற 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த பதாகைகளை ஏந்திச் சென்றனா்.

இதனைத் தொடா்ந்து உதகை பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில்,

மாவட்ட ஆட்சியா் தலைமையில்,  வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு, சிறந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வாக்காளா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி, வயது முதிா்ந்த வாக்காளா்கள் கௌரவிப்பு ஆகியவை நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பிரபாகா், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷினி உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT