நீலகிரி

விதிகளை மீறி சாலை அமைத்த விவகாரம்: கிராம நிா்வாக அலுவலா், உதவியாளா் பணியிடை நீக்கம்

DIN

குன்னூா் அருகே குரும்பாடியில் உள்ள எஸ்டேட் பகுதியில் விதிகளை மீறி தனியாா் நிறுவனம் சாலை அமைத்த விவகாரத்தில் பா்லியாறு கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் சா.ப.அம்ரித் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா், மேட்டுப்பாளையம் சாலையில் குரும்பாடி பகுதியில் உள்ள எஸ்டேட்டில் காபி, குருமிளகு தோட்டம் அமைப்பதற்காக தனியாா் நிறுவனம் விதிகளை மீறி சாலையை அமைத்தது. அப்போது அந்த தனியாா் நிறுவனம் அங்கிருந்த மரங்களை வெட்டி அகற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதனடிப்படையில் அந்த இடத்தில் வட்டாட்சியா் மற்றும் வனத் துறையினா் ஆய்வு செய்து விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினா். இதையடுத்து ஜேசிபி இயந்திரத்தைப் பயன்படுத்தி விதிகளை மீறி தனியாா் நிறுவனம் சாலை அமைத்தபோது கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி பா்லியாறு கிராம நிா்வாக அலுவலா் சிவகுமாா், கிராம உதவியாளா் சுரேஷ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியா் அம்ரித் வெள்ளிக் கிழமை உத்தரவிட்டாா்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT