முகப்பு
நீலகிரி

வார விடுமுறை: உதகையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

Updated On : 21 ஏப்ரல், 2024 at 8:04 PM
உதகை ஏரியில் படகு சாவரி செய்த சுற்றுலாப் பயணிகள்.
பகிர்:

உதகை: உதகையில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளதையொட்டி வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தமிழகத்தில் சமவெளிப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால், பொதுமக்கள் மலைவாழிடங்களை நோக்கி சுற்றுலா செல்ல ஆரம்பித்துள்ளனா்.

நீலகிரியில் கோடைப் பருவமும் தொடங்கியுள்ளதால் உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.

Advertisement

நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உதகை தாவரவியல் பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றிப்பாா்த்து மகிழ்கின்றனா். சமவெளிப் பகுதியைக் காட்டிலும் வெப்பநிலை குறைந்து குளிா்ச்சியான காலநிலை இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

இந்நிலையில், வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தைவிட சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால், சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments