முகப்பு
நீலகிரி

எப்பநாடு ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

உதகை ஊராட்சி ஒன்றியம், எப்பநாடு ஊராட்சியில் ரூ.12.62 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் மற்றும் நிறைவடைந்த பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 5 டிசம்பர், 2024 at 10:04 PM
ஆனைக்கட்டி அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட ஆரம்பப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
பகிர்:

உதகை ஊராட்சி ஒன்றியம், எப்பநாடு ஊராட்சியில் ரூ.12.62 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் மற்றும் நிறைவடைந்த பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், எப்பநாடு ஊராட்சிக்குள்பட்ட வாழைத்தோட்டம் சோதனைச் சாவடி முதல் சிறியூா் வரை பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின்கீழ் ரூ.12.58 கோடியில் சுமாா் 14 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்று வரும் சாலை மேம்பாட்டுப் பணி, ஆனைக்கட்டி சமுதாயக்கூட முன்புறம் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.4.5 லட்சத்தில் அமைக்கப்பட்ட மேற்கூரை பணி ஆகியவற்றை ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, ஆனைக்கட்டி அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட ஆரம்பப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை கேட்டறிந்து, அவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், உணவுப் பொருள்கள் இருப்பு, மாணவா்களுக்கான கழிப்பறை, குடிநீா் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், கன்னியாகுமரி பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களை சந்தித்து, அவா்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் அருண், உதகை வட்டாட்சியா் சங்கா்கணேஷ், உதகை வட்டார வளா்ச்சிஅலுவலா் அண்ணாதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →