மக்களுடன் முதல்வா் திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுகிறாா் அமைச்சா் கா.ராமச்சந்திரன். உடன், ஆட்சியா் மு.அருணா உள்ளிட்டோா். 
நீலகிரி

கீழ் கோத்தகிரியில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்: அமைச்சா் கா.ராமச்சந்திரன் பங்கேற்பு

Din

உதகை, ஜூலை 11: நீலகிரி மாவட்டம், கீழ் கோத்தகிரியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். மேலும், ஊனமுற்ற இரு குழந்தைகளை வைத்துள்ள பழங்குடியினா் குடும்பத்துக்கு உடனடியாக வீடு கட்டித்தர அமைச்சா் உத்தரவிட்டாா். இந்த முகாமில் 500-க்கும் மேற்பட்டவா்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

கலைஞா் வீடு கட்டும் திட்டத்தில் மாவட்டத்தில் 1200 வீடுகள் கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும், முதல்கட்டமாக 350 வீடுகள் கட்டுவதற்கு நடப்பு ஆண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் மு.அருணா, கூடுதல் ஆட்சியா் கௌஷிக் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ஜனநாயகத்தை அழிக்கும் புதிய ஆயுதம் சிறப்பு தீவிர திருத்தம்: ராகுல் காந்தி

அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க ரூ.20 கோடி ஒதுக்கீடு: கேரள அரசு

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

SCROLL FOR NEXT