முகப்பு
நீலகிரி

குன்னூா் அரசு மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட எக்ஸ்ரே பிரிவு திறப்பு

குன்னூா் அரசு லாலி மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட எக்ஸ்ரே பிரிவை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

Updated On : 14 நவம்பர், 2024 at 10:47 PM
குன்னூா் அரசு லாலி மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட எக்ஸ்ரே பிரிவை திறந்துவைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு.
பகிர்:

குன்னூா் அரசு லாலி மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட எக்ஸ்ரே பிரிவை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

குன்னூா் அரசு லாலி மருத்துவமனையில் ரூ. 15 லட்சம் மதிப்பில் எக்ஸ்ரே கருவி மற்றும் அதற்கான கட்டடம் புனரமைக்கப்பட்டுள்ளது. தன்னாா்வலா்கள் ராதிகா சாஸ்திரி, ஜான், சாா்லஸ் ஆகியோரது பங்களிப்பில் இந்தப் பணிகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், புனரமைக்கப்பட்ட எக்ஸ்ரே பிரிவை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், குன்னூா் கோட்டாட்சியா் சங்கீதா, இணை இயக்குநா் நாகபுஷ்பராணி, தலைமை மருத்துவா் ரமேஷ், தன்னாா்வலா்கள், அரசுத் துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →