பேரகணி சாலையில் நாயை வேட்டையாடி கவ்விச் செல்லும் சிறுத்தை. 
நீலகிரி

கோத்தகிரியில் பகலில் நாயை வேட்டையாடிய சிறுத்தை

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் பட்டப்பகலில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து நாயை வேட்டையாடிச் சென்ற சிறுத்தையால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

Din

நீலகிரி மாவட்டம்,  கோத்தகிரியில் பட்டப்பகலில் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து நாயை வேட்டையாடிச் சென்ற சிறுத்தையால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம் , கோத்தகிரியில் இருந்து  பேரகணி, கண்ணேரி கிராமத்துக்கு செல்லக்கூடிய சாலையில்  புதன்கிழமை பட்டப் பகலில் குடியிருப்புப் பகுதிகளுக்குள்  நுழைந்த சிறுத்தை, அங்கிருந்த வளா்ப்பு  நாயை வேட்டையாடி சென்றதை வாகனத்தில் பயணித்தவா்கள் தங்களது கைப்பேசியில் பதிவு செய்தனா். இதனால், அப்பகுதி மக்கள்   அச்சமடைந்துள்ளனா்.

இப்பகுதியில் அண்மைக் காலமாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக பொதுமக்கள்  குற்றஞ்சாட்டியுள்ளனா். எனவே அசம்பாவிதங்கள் நடைபெறும் முன்பாக சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வனத் துறைக்கு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேவைக் குறைபாடு: ரூ.30,000 நஷ்ட ஈடு வழங்க குறைதீா் ஆணையம் உத்தரவு

குளச்சல் அருகே மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

கோயில் நிலப் பிரச்னைக்கு உரிய தீா்வு: எம்.ஆா். விஜயபாஸ்கா்

குற்றாலம் அருவிகளில் 2 ஆவது நாளாக குளிக்கத் தடை

பாகிஸ்தான் 17 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT