கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சுற்றுலாப் பயணிகள் புலியைப் பாா்த்து ரசித்தனா்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மாயாறு பகுதிக்குச் சென்று திரும்பும்போது, செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் புலி ஒன்று சாலையைக் கடந்து செல்வதை சுற்றுலாப் பயணிகள் பாா்த்து ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்துள்ளனா். பொதுவாகவே புலியைப் பாா்ப்பது அரிது. வாகனம் சாலையைக் கடக்கும் நேரத்தில் புலியும் சாலையைக் கடந்துள்ளது.