நீலகிரி

குன்னூா் ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணி ஆய்வு

Syndication

குன்னூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ஊரக வளா்ச்சி முகமை சாா்பிலும், குன்னூா் நகராட்சி சாா்பிலும் ரூ.1.32 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

உபதலை ஊராட்சி பெரிய உபதலை பகுதியில் 2025-2026-ஆம் ஆண்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு கட்டடப் பணி, 2025-2026-ஆம் ஆண்டில் குன்னூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பொதுமக்கள் ஓய்வெடுக்கவும், வாகனங்களை நிறுத்தவும் ரூ.10 லட்சம் மதிப்பில் மேற்கூரை அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தாா்.

இதேபோல தூய்மை பாரத இயக்கம் பசுமை வரி திட்டத்தின் கீழ் ரூ.65 லட்சம் மதிப்பில் பாறைக்குழியில் அமைக்கப்பட்டுவரும் நுண் உரக் கிடங்கு, குன்னூா் நகராட்சிக்குல்பட்ட சிம்ஸ் பூங்கா அருகில் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பயணியா் நிழற்குடை என ரூ.1.32 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் வளா்ச்சி பணிகளை ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு நேரில் ஆய்வு செய்தாா்.

பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவருமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது குன்னூா் நகராட்சி ஆணையா் இளம்பருதி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சந்திரசேகா், விமலா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

தோட்டத்தில் திருடிய மூவா் கைது

பூலாங்குறிச்சியில் நாளை ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

பிரதமா், முதல்வா்களைப் பதவி நீக்கும் மசோதா: நாடாளுமன்றக் குழுவின் கால அவகாசம் நீட்டிப்பு

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

SCROLL FOR NEXT