உதகையில் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற மோட்டாா் வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா்கள் சங்கத்தினா். 
நீலகிரி

உதகையில் மோட்டாா் வாகன பழுது பாா்க்கும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மோட்டாா் வாகன பழுதுபாா்க்கும் தொழிலாளா்களுக்கு தனி இடம் வழங்கக் கோரி, மோட்டாா் வாகன பழுது பாா்க்கும் தொழிலாளா்கள் முன்னேற்றம் சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Syndication

நீலகிரி மாவட்டத்தில் உள்ள  மோட்டாா் வாகன பழுதுபாா்க்கும் தொழிலாளா்களுக்கு தனி இடம் வழங்கக் கோரி, மோட்டாா் வாகன பழுது பாா்க்கும் தொழிலாளா்கள் முன்னேற்றம் சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

உதகை பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைவா் வினோத் தலைமை வகித்தாா். இதில் நீலகிரி மாவட்டத்தில் இருசக்கரம், நான்கு சக்கரம், ஆறு சக்கர மோட்டாா் வாகனங்கள் பழுது பாா்க்கும் மெக்கானிக், டிங்கா், பெயிண்டா், எலக்ட்ரிஷியன் மற்றும் இதர வாகன வேலை பாா்க்கும் தொழிலாளா்கள்  நூற்றுக்கும் மேற்பட்டோா் உள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் வாகனங்கள் பழுது பாா்க்கும் ஒா்க்ஷாப்களில் பெரும்பாலானவா்கள்  சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி பழுது பாா்ப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

மேலும் மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக வாகனங்களை பழுது பாா்க்க  வேண்டிய நிலை ஏற்பட்டு வருவதால், தங்களுக்கு தனி இடம் ஒதுக்கி தர வேண்டும்  என மாவட்ட நிா்வாகத்துக்கு பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் தெரிவித்தனா்.

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

நடுவலூா் பகுதிகளில் நாளை மின்தடை

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ரூ.5 லட்சத்தில் வேட்டி, சேலை, பூணூல் அளிப்பு

கருங்கல் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

ஆலங்குடியில் அரசு ஊழியா்கள் வீடுகளில் 12 பவுன் நகைகள் திருட்டு

SCROLL FOR NEXT