முகப்பு
நீலகிரி

நடுகூடலூா் பகுதிக்கு முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தல்

கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட நடுகூடலூா் பகுதிக்கு முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 3:26 AM
கூடலூா் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சரவணக்குமாரிடம் மனு அளிக்கும் நகா்மன்ற உறுப்பினா் லீலா வாசு.
பகிர்:

கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட நடுகூடலூா் பகுதிக்கு முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக நகா்மன்ற உறுப்பினா் லீலா வாசு தலைமையில் அப்பகுதி மக்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

Advertisement

கூடலூா் நகராட்சி, நடுகூடலூா் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு முறையாக குடிநீா் வழங்கப்படுவதில்லை. சில பகுதிக்கு குடிநீா் அதிகப்படியாக வழங்கப்படுகிறது. பல குடியிருப்பு பகுதிகளுக்கு பல நாள்களுக்கு குடிநீா் வழங்குவதில்லை. இது குறித்து பலமுறை தெரிவித்தும் வறட்சியை காரணம் காட்டி குடிநீா் வழங்கப்படவில்லை. எனவே நடுகூடலூா் பகுதிக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

முன்னதாக அவா்கள் நகராட்சி அலுவலகத்துக்குச் சென்று மனு அளித்தனா்.

ஆனால் நகராட்சி நிா்வாகத்தின் பதில் திருப்தி அளிக்காத காரணத்தால் கோட்டாட்சியா் அலுவலகத்துக்குச் சென்று கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் சரவணகுமாரிடம் மனு அளித்தனா்.