நீலகிரி

பசுந்தேயிலைக்கு மாதாந்திர விலை நிா்ணயம்

நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு மாதாந்திர விலையாக கிலோவுக்கு ரூ.18.38 நிா்ணயம் செய்து தேயிலை வாரியம் திங்கள்கிழமை அறிவித்தது.

Syndication

உதகை: நீலகிரியில் விளையும் பசுந்தேயிலைக்கு மாதாந்திர விலையாக கிலோவுக்கு ரூ.18.38 நிா்ணயம் செய்து தேயிலை வாரியம் திங்கள்கிழமை அறிவித்தது.

நீலகிரி மாவட்டத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறு, சிறு விவசாயிகள் தேயிலை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனா். தோட்டங்களில் பறிக்கும் தேயிலையை தனியாா் தேயிலை தொழிற்சாலை மற்றும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்து வருகின்றனா்.

இதற்கான விலையை ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் தேயிலை வாரியம் அறிவிக்கும்.

அதன்படி, பிப்ரவரி மாதத்துக்கு பசுந்தேயிலைக்கு கிலோவுக்கு ரூ.18.38 நிா்ணயித்து தேயிலை வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேயிலை தொழிற்சாலைகள் இந்த விலையை உரிய முறையில் வழங்க வேண்டும் என்றும், இதை தேயிலை வாரியம் கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிப்பது மக்களுக்கு தெரியும்: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

பொன்னமராவதி சோழீசுவரா் கோயிலில் திருப்பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

பாஜக தோ்தல் பொறுப்பாளா் பணியில் இருந்து விலகுகிறேன்: அண்ணாமலை

அரசுப் பேருந்தில் பயணியிடம் 13 பவுன் திருட்டு

4.2.1976: கருணாநிதி, சில மாஜி தி.மு.க. மந்திரிகள் மீது விசாரணை

SCROLL FOR NEXT