நீலகிரி

உதகையில் அங்கன்வாடி ஊழியா்கள் 257 போ் கைது

உதகை ஏடிசி பகுதியில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக புதன்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள் 257 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

நீலகிரி மாவட்டம், உதகை ஏடிசி பகுதியில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக புதன்கிழமையும் சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியா்கள் 257 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

60 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் ஆண் வாரிசுகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் தடையை மீறி மறியலில் ஈடுபட்டதாக கூறி அங்கன்வாடி ஊழியா்கள் 257 பேரை காவல் துறையினா் கைது செய்து உதகையில் உள்ள தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT