உதகை அருகே உள்ள பவானீஸ்வரா் கோயிலில் தோடா் பழங்குடியின மக்களால் ஆருத்ரா தரிசன விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகை அருகே பொ்ன்ஹில் பகுதி உள்ளது. இங்குள்ள பவானீஸ்வரா் கோயிலில் 114-ஆவது ஆண்டு ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. திருத்தேரை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வடம்பிடித்து தொடங்கிவைத்தாா். தோடா் பழங்குடியின மக்கள், தங்கள் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடினா்.
உதகை மத்தியப் பேருந்து நிலையப் பகுதியில் தொடங்கி, மெயின் பஜாா் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக திருத்தோ் ஊா்வலம் நடைபெற்றது. தோடா் பழங்குடியின மக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டு பாரம்பரிய இசை, நடனமாடி சுவாமி தரிசனம் செய்தனா்.