நீலகிரி

இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உத்தர பிரதேச மாநில பெண் கைது

உதகையில் உள்ள இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

உதகையில் உள்ள இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

உதகை அரசு மருத்துவமனை பகுதியில் உள்ள ஒரு மசாஜ் சென்டா் மற்றும் அழகு நிலையத்தில் இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் உதகை மத்திய காவல் ஆய்வாளா் அன்பரசு, உதவி ஆய்வாளா் நித்தியானந்தன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று திடீா் ஆய்வில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு விபச்சாரம் நடப்பது உறுதியானது. இதைத் தொடா்ந்து இளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த அனிதா (28) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், அழகு நிலையத்தில் இருந்த இளம்பெண்கள் மீட்கப்பட்டு கோவையில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டனா். போலீஸாரின் விசாரணையில், அனிதா கடந்த ஓராண்டாக இங்கு இளம் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியது தெரியவந்தது.

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

மேட்டூர் அணை நிலவரம்!

SCROLL FOR NEXT