முகப்பு
நீலகிரி

உதகையில் குடியரசு தினக் கொண்டாட்டம்

உதகையில் நடைபெற்ற 77-ஆவது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தேசியக்

Updated On : 27 ஜனவரி, 2026 at 1:40 AM
பகிர்:
Updated On : 26 ஜனவரி, 2026 at 8:52 PM

உதகை: உதகையில் நடைபெற்ற 77-ஆவது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தேசியக் கொடியேற்றிவைத்து மரியாதை செலுத்தி, நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நீலகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் உதகை அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். இந்த நிகழ்ச்சியில் 26 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 35 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வழங்கினாா். மேலும், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, காவல் துறை, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவா்களுக்கு பதக்கங்கள், கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.

Advertisement

பின்னா் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், மண்ணின் மைந்தா்களான தோடா், கோத்தா், இருளா் ஆகியோா்களின் பாரம்பரிய இசையுடன் கூடிய நடனம் மற்றும் படுகா் இன மக்களின் பாரம்பரிய நடனம் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பாரம்பரிய நடனம் ஆடி சுற்றுலாப் பயணிகளையும், பொதுமக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ் நிஷா உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.