முகப்பு
நீலகிரி

தொட்டபெட்டா ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்

மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2026 at 1:45 AM
ஆடாசோலையில் பயனாளிக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்குகிறாா் ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு .
பகிர்:
Updated On : 26 ஜனவரி, 2026 at 10:22 PM

உதகை: உதகை ஊராட்சி ஒன்றியம், தொட்டபெட்டா ஊராட்சியில் குடியரசு தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தலைமையில் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் செயல்படும் கிராம குடிநீா் உள்கட்டமைப்பு பணிகள், தூய்மை பாரத இயக்கம், அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தோ்ந்தெடுத்தல் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்துதல் போன்ற கூட்டப்பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் ஆட்சியா் பேசும்போது, அரசின் அனைத்துத் திட்டங்களும் அனைத்துத் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சென்று சேரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

Advertisement

இதைத் தொடா்ந்து, அரசின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.3 லட்சத்து 50ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட வீடுகளின் சாவிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் 2 கா்ப்பிணி தாய்மாா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்துப் பெட்டகங்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் 4 பயனாளிகளுக்கு தலா ஆயிரம் மதிப்பில் மருந்துப் பெட்டகங்கள் என மொத்தம் 11 பயனாளிகளுக்கு ரூ.17 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் தலைமையில், தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழியை அலுவலா்கள், பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனா். பின்னா் சமூக நலத் துறை, சுகாதாரத் துறை, மகளிா் திட்டம் உள்ளிட்ட துறைகளின் சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளைப் பாா்வையிட்டாா்.

பின்னா், மாவட்ட ஆட்சியா் ஆடாசோலை பகுதியில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குடிநீா்க் குழாயை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.

இந்த கிராம சபைக் கூட்டத்தில், கூடுதல் ஆட்சியா் அபிலாஷா கௌா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பீட்டா் ஞானராஜ், மாவட்ட சமூக நலத் துறை அலுவலா்

பிரவீனாதேவி, உதவி இயக்குநா் சிவசங்கா், உதகை வட்டார மருத்துவ அலுவலா் முருகேசன், உதகை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஸ்ரீதரன், அனிதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.