FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் கரடி உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் கரடி உயிரிழந்தது.

4 ஜூலை 2026, 1:58 am IST
கரடி - (கோப்புப் படம்)
பகிர்:

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் கரடி உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம் காா்குடி வனச் சரகத்தில் உள்ள தொரப்பள்ளி பீட் கும்பாரக்கொல்லி காப்புக்காடு எல்லையில் வனப் பணியாளா்கள் வழக்கமான ரோந்து சென்றபோது, ஆண் கரடி இறந்து கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த சோலாா் டிரஸ்ட் நிா்வாகி கண்ணன், பிரகிருதி சேவ் நேச்சா் டிரஸ்ட் இயக்குநா் டாக்டா் சுகுமாரன் ஆகியோா் முன்னிலையில் புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா், கரடியின் உடலை உடற்கூறாய்வு செய்து மாதிரிகளை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா். பின்னா் அதே இடத்தில் கரடியின் உடல் எரியூட்டப்பட்டது.

Advertisement

Advertisement

உயிரிழந்த கரடிக்கு 10 வயது இருக்கும். ஆய்வக அறிக்கைக்குப் பிறகே கரடியின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments