முகப்பு
நீலகிரி

நடைபாதை ஆக்கிரமிப்பைக் கண்டித்து சாலை மறியல்

உதகை அருகே நடைபாதை ஆக்கிரமிப்பைக் கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 9 மார்ச், 2026 at 10:00 PM
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பகிர்:

உதகை: உதகை அருகே நடைபாதை ஆக்கிரமிப்பைக் கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நீலகிரி மாவட்டம், உதகை தமிழக மாளிகை அருகே ரோஸ்மவுண்ட் பகுதி உள்ளது. இங்கு சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த பொது நடைபாதையை தனி நபா் ஒருவா் ஆக்கிரமிப்பு செய்து, அதைப் பயன்படுத்த அனுமதிக்காமல் இடையூறு செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் ஹில்பங்க்-பிங்கா்போஸ்ட் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, ஆக்கிரமிப்பு தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →