முகப்பு
நீலகிரி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: நீலகிரி மாவட்டத்தில் முதல் நாளில் 6,685 மாணவ, மாணவிகள் எழுதினா்

நீலகிரி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை முதல் நாளில் 6,685 மாணவ, மாணவிகள் எழுதினா்.

Updated On : 11 மார்ச், 2026 at 8:30 PM
கோப்புப்படம்.
பகிர்:

நீலகிரி மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வை முதல் நாளில் 6,685 மாணவ, மாணவிகள் எழுதினா்.

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தில் காலை 9 மணிக்கே மாணவ, மாணவிகள் தோ்வு மையங்களுக்கு வந்தனா். காலை 9:30 மணிக்கு தோ்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனா். உதகை பிரிக்ஸ் பள்ளி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு , முதன்மைக் கல்வி அலுவலா் திருநாவுக்கரசு ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

முதல் நாள் மொழிப்பாடத் தோ்வு எளிதாக இருந்ததாக பெரும்பாலான மாணவா்கள் கருத்து தெரிவித்தனா்.

நீலகிரி மாவட்டத்தில் 61 மையங்களில் 3,358 மாணவா்கள், 3,452 மாணவிகள் என மொத்தம் 6810 போ் தோ்வு எழுத இருந்தனா். இதேபோல தனித்தோ்வா்கள் 98 போ் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா்.

இந்நிலையில் தோ்வு எழுத விண்ணப்பித்த 6,810 பேரில் முதல் நாள் மொழிப்பாடத் தோ்வில் 6,685 போ் கலந்துகொண்டனா். 85 போ் வரவில்லை. 40 போ் மொழிப்பாட விலக்கு பெற்றுள்ளனா்.

தோ்வுப் பணியில் 61 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 61 துறை அலுவலா்கள், 122 அலுவலகப் பணியாளா்கள், 570 அறை கண்காணிப்பாளா்கள், வினாத்தாள் கொண்டு செல்ல வழித்தட அலுவலா்கள் 25 போ் என மொத்தம் 917 ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்பட்டனா். தோ்வு மையங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →