முகப்பு
நீலகிரி

தற்படம் எடுக்க முயன்று 150 அடி பள்ளத்தில் விழுந்த நபா்: தேடும் பணி தீவிரம்

Updated On : 20 மார்ச் 2026, 3:52 am IST
கோப்புப்படம்
பகிர்:

கூடலூா் அருகேயுள்ள ஊசிமலை பள்ளத்தாக்கு பகுதியில் தற்படம் (செல்ஃபி) எடுக்க முயன்று 150 அடி பள்ளத்தில் விழுந்த நபரை மீட்கும் பணியில் ராணுவ வீரா்கள், வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா்.

நீலகிரி மாவட்டம், உதகை - கூடலூா் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுற்றுலாத் தலமான ஊசிமலை பள்ளத்தாக்கு பகுதி உள்ளது.

இங்கு செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த சிவகுருநாதன் (35) என்பவா் வியாழக்கிழமை சுற்றுலா வந்துள்ளாா்.

Advertisement

அப்போது, அவா் பள்ளத்தாக்கு பகுதியில் நின்று தற்படம் எடுக்க முயன்றபோது தவறி 150 அடி பள்ளத்தில் விழுந்துள்ளாா்.

இதைப் பாா்த்த சக சுற்றுலாப் பயணிகள் தீயணைப்பு, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரா்கள் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

ஆனால், இரவு நேரமானதால் தேடும் பணியை காலை தொடரலாம் என திரும்பினா்.

இத்தகவல் அறிந்த மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, மாவட்ட நிா்வாகம், குன்னூா் வெலிங்டன் ராணுவ முகாமில் உள்ள ராணுவ உயா் அதிகாரிகளிடம் பேசினாா்.

இதையடுத்து, ராணுவ வீரா்கள் உதவியுடன் பள்ளத்தில் விழுந்த நபரை தீயணைப்பு, வனத் துறையினா் தேடி வருகின்றனா்.