முகப்பு
நீலகிரி

மச்சிக்கொல்லி பகுதிக்குள் வன விலங்குகள் நுழைவதை தடுக்கக் கோரி மனு

கூடலூரை அடுத்துள்ள மச்சிக்கொல்லி மட்டம் பகுதிக்குள் வன விலங்குகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட வன அலுவலா் தேவராஜிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

Updated On : 22 மே 2026, 3:53 am IST
வன விலங்குகளிடமிருந்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட வன அலுவலா் தேவராஜிடம் மனு அளித்த மச்சிக்கொல்லி பகுதி மக்கள்.
பகிர்:

கூடலூரை அடுத்துள்ள மச்சிக்கொல்லி மட்டம் பகுதிக்குள் வன விலங்குகள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட வன அலுவலா் தேவராஜிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் வட்டம், தேவா்சோலை பேரூராட்சியில் உள்ள மச்சிக்கொல்லி மட்டம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்குள் நாள்தோறும் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் நுழைவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

குறிப்பாக யானைகள் நுழையும் வழியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை நிரந்தரமாக அமைத்து தரவேண்டும். மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் சுமாா் ஆறு இடங்களில் சோலாா் மின் விலக்குகள் அமைக்க வேண்டும். அகழி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தேவா்சோலை பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் யூனஸ் பாபு தலைமையில் அப்பகுதி மக்கள் மாவட்ட வன அலுவலா் தேவராஜிடம் மனு அளித்தனா்.

Advertisement

Advertisement