திருப்பூர்

எலுமிச்சையில் சொறி நோய்த் தாக்குதல்: விவசாயிகள் கவலை

வெள்ளக்கோவில் பகுதியில் எலுமிச்சை பழங்களில் சொறி நோயின் தாக்குதல் அதிக அளவு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

DIN

வெள்ளக்கோவில் பகுதியில் எலுமிச்சை பழங்களில் சொறி நோயின் தாக்குதல் அதிக அளவு உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வெள்ளக்கோவில் பகுதியில் அதிக அளவு எலுமிச்சை விவசாயம் நடைபெற்று வருகிறது. இம்மரங்களின் இலைகள், பழங்களில் புள்ளிகள் தோன்றுகின்றன. இந்தப் பாதிப்பு காரணமாக எலுமிச்சையின் விளைச்சல் குறைந்துள்ளதுடன், பழங்களை விற்கவும் முடிவதில்லை.
இதுகுறித்து வேளாண் அலுவலர் முருகேசன் கூறுகையில், "இந்தச் சொறி நோய் ஒரு வகை பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த நோய் அறிகுறிகள் தென்பட்டவுடன் காய்ந்த இலைகள், குச்சிகளைத் தீயிட்டு அழிக்க வேண்டும். காப்பர் ஆக்ஸி குளோரைடு, சூடோமோனாஸ் புளூரசன்ஸ், வேப்பம் புண்ணாக்கு கரைசல் ஆகியவற்றைத் தெளித்தால் இந்நோய் கட்டுப்படும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசனில் சிலம்பரனுக்கு 3 தோற்றங்கள்!

கெட்டி மேளம் தொடரில் இணையும் சண்டக்கோழி நடிகர்!

எதிர்க்கட்சிகள் அமளி! ஒரு நிமிடத்தில் முடங்கிய மக்களவை!

இஸ்ரோவில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..?

பங்குச்சந்தை வீழ்ச்சி! அனைத்துத் துறைகளும் சரிவுடன் வர்த்தகம்!

SCROLL FOR NEXT