திருப்பூர்

அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகள் விரைவில் கணினிமயமாக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் தகவல்

DIN

அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகள் விரைவில் கணினி மயமாக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகளை கணினி மயமாக்குதல் குறித்த பயிற்சி முகாமைத் திருப்பூரில் வியாழக்கிழமை தொடக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பேசியதாவது:
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தற்போது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, இணையச் சம்பளப் பட்டியல் (வெப் பே ரோல்) மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை சேர்க்கப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசு ரூ. 288 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்துக்கான பணிகள் தனியார் நிறுவனதிடம் ஒப்படைக்கப்பட்டு, திட்ட அலுவலகங்களில் உள்கட்டமைப்பு மேம்படுத்துதல், மென்பொருள் உருவாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில் இதன் மூலமாக 547 அலுவலர்கள் நேரடி இணையத்தின் மூலமாக சம்பளப் பட்டியலைக் கருவூலத்தில் சமர்ப்பிக்க இயலும். அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகள் கணினிமயமாக்கப்பட்டு, சம்பளப் பட்டியல், பதவி உயர்வு, பணி மாறுதல், விடுப்பு உள்ளிட்ட விவரங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும்.
இதனால் பணிப் பதிவேடு பராமரிப்புப் பணிகள் எளிமையாகும் என்றார்.
இதில், மண்டலக் கருவூல இணை இயக்குநர் செல்வசேகரன், மாவட்டக் கருவூல அலுவலர் சுப்புலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT