திருப்பூர்

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

DIN

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு மாதம் ரூ. 3 ஆயிரம் வீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
  தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 4-ஆவது மாநாடு பல்லடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் என்.சேகர் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.மணி வரவேற்றார்.
60 வயதை கடந்த கட்டடத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு மாதம் ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குழந்தைகளின் கல்விச் செலவை முழுவதையும் அரசு ஏற்க வேண்டும். வீடு இல்லாத தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டி தர வேண்டும். பல்லடம் அறிவொளி நகரில் 20 ஆண்டுகளாக குடியிருந்து வரும் 1,250 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில், மாவட்டத் தலைவராக என்.சேகர், செயலாளராக எஸ்.சங்கர், துணைத் தலைவர்களாக முருகேசன், பழனிசாமி, துணைச் செயலாளராக வெள்ளிங்கிரி, ரவிக்குமார், பொருளாளராக ஆர்.கணேசன் உள்ளிட்ட 37 பேர் பொதுக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாநாட்டில், ஏஐடியூசி மாநிலத் தலைவர் என்.பெரியசாமி, மாநில செயலாளர் ஆர்.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.ரவி, ஒன்றியச் செயலாளர் எஸ்.சாகுல் அமீது உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT