திருப்பூர்

உழவர் உழைப்பாளர் கட்சியினர் உண்ணாவிரதம்

DIN

தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்துக்கு பிரதமர் தீர்வு காணக் கோரி, உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் புதன்கிழமை உண்ணாவிரதம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்துக்கு உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் கு.செல்லமுத்து தலைமை வகித்தார்.
இதில், அவர் பேசியதாவது:
தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவி வருகிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், விவசாயிகளின் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கடந்த 15 நாள்களாக தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை முக்கியப் பிரச்னையாக கருதி பிரதமர் தீர்வு காண வேண்டும் என்றார்.
உண்ணாவிரதத்தில் கட்சியின் பொருளாளர் பாலசுப்பிரமணியம், மாநில ஆலோசகர் பாலு, மாநில துணைச் செயலாளர் ஈஸ்வரன், கோவை மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT