பனியன் நிறுவனத்தில் தீ விபத்து
உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் புதன்கிழமை நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பூர்பனியன் நிறுவனத்தில் தீ விபத்து
உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் புதன்கிழமை நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.
உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் புதன்கிழமை நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு பேல்கள் சேதம் அடைந்தன.
உடுமலையை அடுத்துள்ள குடிமங்கலம் நால் ரோடு பகுதியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டையில் பி.மணி என்பவருக்கு சொந்தமான பனியன் உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்நிலையில், ஆலையின் உற்பத்தி பிரிவில் திடீரென புதன்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தீ மள மளவென பரவத் தொடங்கியது.
தகவலறிந்த உடுமலை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பல மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு பேல்கள் சேதமடைந்தன.
இதுகுறித்து தீயணைப்புத் துறையினர் கூறுகையில், " மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்க லாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சேத விவரம் குறித்து மதிப்பிடப்பட்டு வருகிறது' என்றனர்.