திருப்பூர்

ராமாயணம் குறித்த எழுத்துப் போட்டி: வித்யநேத்ரா பள்ளி மாணவர்கள் வெற்றி

DIN

ராமாயணம் தொடர்பான எழுத்துப் போட்டியில் கோமங்கலம்புதூர் வித்யநேத்ரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
திருச்சி ஸ்ரீமான் அறக்கட்டளை சார்பில் ராமாயணத்தின் பாலகாண்டம் பகுதியில் எழுத்துப் போட்டி நடைபெற்றது. இதில், இப்பள்ளியில் இருந்து ராமர் பிரிவில் 14 பேரும், லட்சுமணன் பிரிவில் 12 பேர் என மொத்தம் 26 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
இதில், 3 பேர் முதலிடமும், 2 பேர் இரண்டாமி டமும், ஒருவர் மூன்றாமிடமும், 2 பேர் ஆறுதல் பரிசும் பெற்றனர். இதையொட்டி, பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.பள்ளித் தலைவர் டாக்டர் கே.பாலசுந்தரம், செயலர் தம்பு(எ)நந்த கோபாலகிருஷ்ணன், அறங்காவலர்கள், முதல்வர் கோபாலகிருஷ்ணன், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளைப் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT