முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவிலில் முதியவர் சாவு

வெள்ளக்கோவிலில் அரசு மதுபானக் கடை அருகே முதியவர் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.

Updated On : 9 ஏப்ரல், 2018 at 6:19 AM
பகிர்:

வெள்ளக்கோவிலில் அரசு மதுபானக் கடை அருகே முதியவர் இறந்து கிடந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
காங்கயம் சாலை, இரட்டைக்கிணறு பகுதிக்கு அருகே அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடைக்கு சனிக்கிழமை இரவு மது அருந்த வந்த முதியவர் போதையில் அங்கேயே படுத்துக் கிடந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ஊழியர்கள் கடையைப் பூட்டிச் சென்றுவிட்டு,  மீண்டும் ஞாயிற்றுக்கிழமை கடையை திறக்க வந்தபோது முதியவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.  இறந்தவர் வயது சுமார் 65 இருக்கலாம்.  உடலில் ஆங்காங்கே இலேசான சிராய்ப்புக் காயங்கள் இருந்தன. இறந்தவர் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை. தற்போது சடலம் கோவை அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.