திருப்பூர்

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் பள்ளியில் மாநில அளவிலான டென்னிகாய்ட் போட்டி: வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசளிப்பு

DIN

பள்ளிக் கல்வித் துறையால் நடத்தப்பட்ட பாரதியார் தின மற்றும் குடியரசு தின மாநில அளவிலான வளையப்பந்து (டென்னிகாய்ட்) போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு காங்கயம், ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில் நடைபெற்ற மாநில அளவிலான வளையப் பந்துப் போட்டிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 
இப்போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றன. இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா காங்கயம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளியின் தாளாளர் கே.வைத்தீஸ்வரன் தலைமை வகித்தார். காங்கயம், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ஆர்.கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி பேசினார். 
மேலும், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் எம்.முருகேஸ்வரி(திருப்பூர்) , அமலா டெய்ஸி(கரூர்) ,  எம். தேன்மதி(தஞ்சாவூர்) ,  ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் கே.மணிவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்த விழாவில், தேனி, விருதுநகர் திருவள்ளூர், தஞ்சை, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள்,   போட்டியின் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர்களான தலைமையாசிரியர்கள் எஸ்.சிவகுமார் (காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளி),  டி.தண்டபாணி(தாயம்பாளையம் வி.எம்.சி.டி உயர்நிலைப் பள்ளி),  கே. சண்முகசுந்தரி (புதுப்பை அரசு மேல்நிலைப் பள்ளி), ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பள்ளி முதல்வர் மு.ப.பழனிவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

SCROLL FOR NEXT