திருப்பூர்

அரசுப் பள்ளியில் 940 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

DIN


திருப்பூர் குமார் நகர் மேல்நிலைப்பள்ளியில் 3 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார் வியாழக்கிழமை வழங்கினார்.
திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உள்பட்ட குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, பத்மாவதிபுரம் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, வெங்கமேடு வி.கே. அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா குமார் நகர் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட கல்வி அலுவலர் சித்ரா தலைமை வகித்தார். குமார் நகர் பள்ளி தலைமையாசிரியை காயத்ரி வரவேற்றார். இதில் திருப்பூர் வடக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் பங்கேற்று 3 பள்ளிகளைச் சேர்ந்த 940 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கினார்.
இதில் மண்டல தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், முன்னாள் கூட்டுறவு சங்க நிர்வாகி கருணாகரன், பொறுப்பாளர் கணேஷ், முன்னாள் கவுன்சிலர்கள் ஈஸ்வரன், சின்னசாமி, பாலசுப்பிரமணியம், சுப்பு, ஐஸ்வர்ய மகாராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT