திருப்பூர்

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பை வழங்கும் நிகழ்ச்சி

DIN


பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாணவர்களுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணிப் பை வழங்கும் நிகழ்ச்சி ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்து, 1900 மாணவ, மாணவியருக்கு துணிப் பைகளை வழங்கி பேசியதாவது:
மாணவர்கள், தங்களின் பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் சுற்றத்தார் அனைவரிடமும் பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் கொடிய நோய்கள் மற்றும் தீமைகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.
ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் தங்களுடைய வீட்டின் அருகாமையில் அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு அவற்றைப் பேணிக் காக்க வேண்டும்.
பிளாஸ்டிக் பொருள்களை தவிர்த்து சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் நீர்நிலைகளை பேணிக் காத்து திருப்பூர் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா முழு சுகாதார மாவட்டமாக திகழ செய்ய வேண்டும் என்றார்.
நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாந்தி, ஊத்துக்குளி வட்டாட்சியர் ரவீந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

SCROLL FOR NEXT