முகப்பு
திருப்பூர்

வாகன உதிரிபாக கடையில் தீ விபத்து

வெள்ளக்கோவிலில் செவ்வாய்க்கிழமை இரவு வாகன உதிரி பாகக் கடை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதில் பொருள்கள் சேதமடைந்தன.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

வெள்ளக்கோவிலில் செவ்வாய்க்கிழமை இரவு வாகன உதிரி பாகக் கடை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டதில் பொருள்கள் சேதமடைந்தன.
வெள்ளக்கோவில், காங்கயம் சாலையில், அழகாபுரி நகர் பிரிவு அருகே சுவாமிநாதன் என்பவருக்குச் சொந்தமான நான்கு சக்கர வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது.
இரவு வேலை முடிந்து சென்ற பின்னர்,  கடைக்குள் தீப்பிடித்ததாகத் தெரிகிறது. அருகிலிருந்தவர்கள் கொடுத்த தகவலின் பேரில், வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் சி.தனசேகரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, இரண்டரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.  இந்த விபத்தில், வாகன உதிரி பாகங்கள், அலமாரிகள், வாகன உயவு எண்ணெய் வகைகள் எரிந்து சேதமடைந்தன. சேத மதிப்பு உடனடியாகத் தெரியவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →