திருப்பூர்

அரசுப் பொருள்காட்சி நிறைவு: 61 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்

DIN

திருப்பூரில் முதல்முறையாக நடத்தப்பட்ட அரசுப் பொருள்காட்சியை 61 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் முதல்முறையாக அரசுப் பொருள்காட்சி கடந்த 2017 டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் பொருள்காட்சி 45 நாள்கள் வரை நடைபெற்று, ஜனவரி 17-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.
பொருள்காட்சியில் பொது மக்கள் பார்த்து பயன்பெற்றுச் செல்லும் விதமாக அரசின் நலத் திட்டங்கள், திட்டம் பெறுவதற்கான 30 அரசுத் துறை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. திட்டங்கள் குறித்து ஒவ்வொரு கண்காட்சி அரங்கிலும் எடுத்துரைக்கப்பட்டதுடன், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொழுதுபோக்கும் விதமாக, உணவு விடுதிகள், விளையாட்டு அம்சங்கள் அமைக்கப்பட்டதுடன், நாள்தோறும் நலிவுற்ற கலைஞர்கள் மூலமாக விழிப்புணர்வு நாடகங்களும் நடத்தப்பட்டன.
இந்தப் பொருள்காட்சியை மொத்தம் 61 ஆயிரத்து 481 பேர் நுழைவுக் கட்டணம் செலுத்தி பார்வையிட்டுச் சென்றுள்ளனர். அதன் மூலமாக அரசுக்கு ரூ. 6 லட்சத்து 75 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஜா நிறக் காரிகை!

SCROLL FOR NEXT