வெள்ளக்கோவிலில் நூற்பாலையில் தீ விபத்து
வெள்ளக்கோவிலில் உள்ள ஒரு நூற்பாலையில் புதன்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் இயந்திரத்தின் சில பாகங்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமாயின.
வெள்ளக்கோவிலில் உள்ள ஒரு நூற்பாலையில் புதன்கிழமை நிகழ்ந்த தீ விபத்தில் இயந்திரத்தின் சில பாகங்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமாயின.
வெள்ளக்கோவில், குட்டக்காட்டுப்புதூரில் திருமூர்த்தி (45) என்பவருக்குச் சொந்தமான நூற்பாலை உள்ளது. இங்குள்ள புளோரூம் இயந்திரத்தில் புதன்கிழமை திடீரென தீப்பிடித்தது. மின் கசிவு காரணமாகத் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் சி.தனசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் இயந்திரத்தின் சில பாகங்கள், நூல் கோன்கள் எரிந்து சேதமடைந்தன.