திருப்பூர்

வீட்டை காலி செய்யச் சொல்லி நெருக்கடி: காங்கயம் வட்டாட்சியரிடம் புகார்

DIN

காங்கயம் அருகே 35 ஆண்டுகளாக குடியிருக்கும் வீட்டை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் காலி செய்யச் சொல்லி நெருக்கடி கொடுப்பதாக காங்கயம் வட்டாட்சியரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கயம் தாலுகா, எல்லப்பம்பாளையம் புதூரை அடுத்த வஞ்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கே.மயில்சாமி என்பவர் காங்கயம் வட்டாட்சியரிடம் வெள்ளிக்கிழமை கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:
எனக்கு சொந்த நிலமோ, வீடோ இல்லாததால் வஞ்சிபாளையத்தில் சாலையோரத்தில் கடந்த 35 ஆண்டுகளாக குடிசை அமைத்து குடும்பத்துடன் குடியிருந்து வருகிறேன். இதற்கு இலவச மின்சார வசதியும் உள்ளது. மேலும் இந்த வீட்டு முகவரிக்கு எங்களுக்கு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் உள்ளன.
இந்நிலையில், தற்போது வசித்து வரும் இடத்தில் இருந்து எங்களைக் காலி செய்யுமாறு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். எனவே, எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதோடு, அதுவரையில் இந்த இடத்தில் எங்களை குடியிருக்க அனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT