திருப்பூர்

கோயில் தேரோட்டப் பாதையில் சூதாட்டம்: 6 பேர் கைது

DIN

வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோயில் தேரோட்டப் பாதையில் சூதாடிய 6 பேரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
 நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலுக்குச் சொந்தமாக திறந்தவெளி காலியிடம் உள்ளது. தேரோட்டப் பாதையும் இதில் உள்ளது. 
பாதுகாப்பாற்ற இக்கோயில் காலி இடத்தில் லாரி, வேன், கார் உள்ளிட்ட வாடகை  வாகனங்களை நிறுத்தியுள்ளனர். இந்த வாகனங்கள் நிற்கும் இடத்தில் சூதாட்டம் நடப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது. 
 இதையடுத்து, வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளர் அன்புராஜ் அங்கு ஆய்வு மேற்கொண்டபோது அங்கு சூதாடிய 6 பேர் பிடிபட்டனர்.
 விசாரணையில், அவர்கள் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த பாஸ்கரன் (28), சரவணகுமார் (38), ராஜா (47), சிவநாதபுரம் வேலுசாமி (42), மோகன்ராஜ் (35), முத்தூர் வேலம்பாளையம் பிரகாஷ் (27) என தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 6 பேரும் கைது செய்யப்பட்டனர். 
சம்பவ இடத்தில் இருந்து சீட்டுக் கட்டுகள், சூதாட்டப் பணம் ரூ. 12,670 ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT