திருப்பூர்

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சார் பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் கோரிக்கை மனு

DIN

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தை அமைக்க வேண்டும் எனக் கோரி  மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
   ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.  இதற்கு ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதன் விவரம்:
 தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை கோரி மனு: பல்லடம்  அருகே  காரணம்பேட்டை,  பெருமாள்கவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ்,  தனது மனைவிக்கு தவறான சிகிச்சை அளித்த, திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை நிர்வாகம் மீதும், சிகிச்சை  அளித்த மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி தர்னா போராட்டத்தில் ஈடுபட்டு, ஆட்சியரிம் மனு அளித்தார். 
திருப்பூர், அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனு: திருப்பூர் கொங்குமெயின் ரோடு, முதல் ரயில்வேகேட் அருகில் உள்ள அம்பேத்கர் காலனிப் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  அனைவருக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 திருப்பூர், வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திகேயன் அளித்த மனு: திருப்பூர் மாநகரப் பகுதியில்  உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தை நெருப்பெரிச்சல் கிராமத்தில் அமைப்பதாகத் தெரிகிறது.  இதனால், பெருந்தொழுவு, நல்லூர், விஜயாபுரம், பல்லடம் அருகில் உள்ளவர்கள், மங்கலம் உள்ளிட்ட பகுதியில் வசித்து வருபவர்கள் 2 பேருந்துகளில்
மாறிமாறிப் பயணித்து நெருப்பெரிச்சல் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதனால், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் 25 கிலோ மீட்டர் பயணம் செய்யவேண்டிய நிலை உள்ளது. எனவே,  தற்போது செயல்பட்டு வரும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தை அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதில், இயற்கை மரண நிவாரண  உதவித் தொகை, மாதாந்திர ஓய்வூதிய  உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை என 29  பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட  உதவிகளை ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.
   மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னராமசாமி, சமூகப் பாதுகாப்புத் திட்ட  தனித் துணை ஆட்சியர் ராகவேந்திரன் உள்ளிட்டோர் 
பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT