திருப்பூர்

பதற்றமான வாக்குச் சாவடிகளைக் கண்காணிக்க நுண்பார்வையாளர்களுக்குப் பயிற்சி

DIN

பதற்றமான வாக்குச் சாவடிகளைக் கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள வங்கி மற்றும் மத்திய அரசுப் பணியாளர்களுக்கான பயிற்சி  மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இந்த பயிற்சி முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்து பேசியாதவது:
இந்திய தேர்தல் ஆணையத்தால் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களைக் கண்காணிப்பதற்காக பொதுப் பார்வையாளர்கள், காவல் பார்வையாளர்கள் மற்றும் செலவினப் பார்வையாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், திருப்பூர் மாவட்டத்தில், 386 வாக்குச் சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளைக் கண்காணிப்பதற்காக வங்கி மற்றும் மத்திய அரசுப் பணியாளர்களை கொண்ட 452 நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளைக் கண்காணித்து நேரடியாக பொதுப் பார்வையாளர்களுக்குத் தகவல்களை அளிக்க உள்ளனர்.
நுண்பார்வையாளர்கள் வாக்குப் பதிவு நாளன்று மாதிரி வாக்குப் பதிவு நடத்தி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரியான முறையில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
வாக்குச் சாவடி முகவர்கள் தங்களது அடையாள அட்டை சரியானதா என்பதை சரி பார்க்க வேண்டும். மேலும், வாக்காளர்கள் வாக்களிக்க வரும்போது தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் அறிவுறுத்தப்பட்ட 11 வகையான அடையாள அட்டைகள் மூலம் வாக்களிக்க வழிவகை செய்ய வேண்டும்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுந்தர மூர்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கீதா பிரியா, தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT