திருப்பூர்

திருப்பூர் மாவட்ட போலீஸாருக்கு 25 இ-செலான் கருவிகள் வழங்கல்

DIN

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் வாகனச் சோதனையில் ஈடுபடும் காவலர்களுக்கு 25 இ-செலான் கருவிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.கயல்விழி புதன்கிழமை வழங்கினார். 
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இ-செலான் கருவியின் மூலமாக வாகன வழக்குகளைப் பதிவு செய்யும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், தமிழக அரசால் புதியதாக செயல்படுத்தப்பட்ட 25 இ-செலான் கருவிகளை போக்குவரத்து காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.கயல்விழி வழங்கினார். 
மேலும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றி வரும் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. இந்த இ-செலான் கருவி மூலமாக வசூலிக்கப்படும் அபராதத் தொகை அரசு கணக்கில் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறையினர் தெரிவித்தனர். 
நிகழ்ச்சியில்,  கூடுதல்  மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்  (மாவட்ட தலைமையகம்) ஜெயசந்திரன் உள்ளிட்ட  காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெய்கண்டீஸ்வரா் கோயி சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியா்

அமாவாசையையொட்டி அங்காளம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

குடிநீா் கோரி தூத்துக்குடி இனிகோ நகரில் பொதுமக்கள் மறியல்

பொதுப்பாதையில் ஆக்கிரமிப்பு அரவக்குறிச்சியில் சாலை மறியல்

கிராம நிா்வாக அலுவலா் மாயம்

SCROLL FOR NEXT