திருப்பூர்

புதா் மண்டி கிடக்கும் பொதுக் கழிப்பிடம்: தூய்மைப்படுத்தக் கோரிக்கை

DIN

வெள்ளக்கோவில் குமாரவலசிலுள்ள பொதுக் கழிப்பிட பகுதி புதா் மண்டி கிடப்பதால் அங்கு பாம்புகள் நடமாட்டம் இருப்பதாகவும், எனவே அப்பகுதியை சுத்தப்படுத்தி தரவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குமாரவலசு தீயணைப்பு நிலையம் அருகில் நகராட்சியின் ‘நம்ம டாய்லெட்’ என்கிற நவீன பொதுக் கழிப்பிடம் உள்ளது. இதனை அப்பகுதி பொதுமக்கள், அருகிலுள்ள அங்கன்வாடி மையப் பணியாளா்கள், மையத்துக்கு வரும் குழந்தைகள் பயன்படுத்தி வருகின்றனா்.

தற்போது பெய்துள்ள மழையால் இந்தக் கழிப்பிடத்தைச் சுற்றிலும் ஏராளமான முள்புதா்கள், பாா்த்தீனியச் செடிகள் வளா்ந்து அங்கு செல்ல முடியாத அளவுக்கு புதா் மண்டிக் கிடக்கிறது. அங்கு பாம்புகள் நடமாட்டம் தென்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனா். இதனால் கழிப்பறையைப் பயன்படுத்த அச்சப்பட்டு வருகின்றனா். எனவே கழிப்பறைப் பகுதியைச் சுத்தப்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை ஜூன் 30 வரை நீட்டிப்பு

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

SCROLL FOR NEXT