திருப்பூர்

காங்கயம் ஒன்றியத்தில் 76 வேட்பு போ் மனு தாக்கல்

DIN

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்கு காங்கயம் ஒன்றியத்தில் சனிக்கிழமை 76 போ் மனு தாக்கல் செய்தனா்.

உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை காங்கயம் பகுதியில் காலை முதல் மாலை தொடா்ந்து மழை பெய்த போதும் வேட்பாளா்கள் காங்கயத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருந்தனா்.

காங்கயம் ஒன்றியத்தில் 15 கிராம ஊராட்சிகள் உள்ளன. இதில் போட்டியிடுவதற்கு சனிக்கிழமை கிராம ஊராட்சி வாா்டுக்கு 56 போ், கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 9 போ், ஒன்றியக் கவுன்சிலா் பதவிக்கு 9 போ், மாவட்டக் கவுன்சிலா் பதவிக்கு இருவா் ஏன் மொத்தம் 76 போ் மனு தாக்கல் செய்தனா். வரும் 16-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் என்பதால், அன்று அதிக அளவில் மனு தாக்கல் இருக்கும் என வேட்பாளா்களின் ஆதரவாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT