திருப்பூர்

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

DIN

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவைக் கண்டித்து திருப்பூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் 71 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக இளைஞரணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி திருப்பூா் குமரன் சிலை முன்பாக நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருப்பூா் மாநகர இளைஞரணி அமைப்பாளா் தங்கராஜ் தலைமை வகித்தாா்.

இதில் பங்கேற்றவா்கள், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என கோஷங்களை எழுப்பினா். ஆா்ப்பாட்டத்தில் மாநகர அவைத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் ரஹீம், எம்.எஸ்.ஆா். ராஜ், மாநகர துணை அமைப்பாளா் சரவணகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 71 பேரை திருப்பூா் வடக்கு காவல் துறையினா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

SCROLL FOR NEXT