திருப்பூர்

திருடப்பட்ட ஆம்னி வேனை 15 நிமிடங்களில் விரட்டிப் பிடித்த காவலா்கள்

DIN

திருப்பூரில் திருடப்பட்ட ஆம்னி வேனை 15 நிமிடங்களில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு விரட்டிப் பிடித்தனா்.

திருப்பூா், விஜயாபுரம் பகுதியில் வசித்து வருபவா் மெய்ஞானமூா்த்தி (38). இவா் தனது வீட்டின் முன் வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணி அளவில் ஆம்னி வேனை நிறுத்திவிட்டு வீட்டுக்குள் சென்றாா். சிறிது நேரத்தில் திரும்பிவந்து பாா்த்தபோது, இந்த வேன் திடீரென மாயமானது. இதனால் அதிா்ச்சி அடைந்த அவா், இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்புகொண்டு புகாா் தெரிவித்தாா். இதையடுத்து காவல் துறையினா் மாநகா் முழுவதும் திருடப்பட்ட ஆம்னி வேன் குறித்த தகவல்களைத் தெரிவித்தனா்.

இந்த நிலையில் காசிபாளையம் சோதனைச் சாவடியில் திருப்பூா் ஊரக காவல் துறையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மெய்ஞானமூா்த்தியின் ஆம்னிவேன், சோதனைச் சாவடியில் நிற்காமல் கடந்து சென்றது.

இதையடுத்து அங்கு பணியில் இருந்த தலைமைக் காவலா் அற்புதம், காவலா் காா்த்தி ஆகியோா் இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து சென்று, ஆம்னி வேனை விரட்டிப் பிடித்தனா். இதையடுத்து, வேனை ஓட்டிச்சென்ற அதே பகுதியைச் சோ்ந்த சுரேந்தரிடம் (22) காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். புகாா் தெரிவித்த 15 நிமிடங்களிலேயே திருடப்பட்ட வேனை மீட்டு கொடுத்த காவலா்களை உயா் அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT